கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
கொடியேற்று விழா
அந்த வகையில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. சர்வேஷ்வர தீச்சர், கோயிலின் உள்புறத்தில் அமைந்துள்ள தங்கக்கொடி மரத்தில் கொடி ஏற்றிவைத்தார். இதில் ஏராளமான தீட்சிதர்கள் கலந்துகொண்டு வேதமந்திரங்கள் முழங்க சாமிக்கு ஆராதனை செய்தனர்.
தேர்வு திருவிழா
தொடர்ந்து பஞ்சமூர்த்திகளான முருகர், சிவகாமி சுந்தரி அம்மன், நடராஜருக்குச் சிறப்புத் திருமுழுக்கு செய்யப்பட்டு தீபாராதனை செய்தனர். வரும் டிசம்பர் 29ஆம் தேதி முக்கியத் திருவிழாவான தேர்த் திருவிழாவும், அதனைத்தொடர்ந்து 30ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது.
முதலமைச்சரிடம் கோரிக்கை
இந்நிலையில், தேர்த்திருவிழாவின்போது பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர்களை இழுத்துச் செல்லவும், தரிசன விழாவில் பக்தர்கள் கலந்துகொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும் எனச் சட்டப்பேரவை உறுப்பினர் பாண்டியனுடன் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் நேற்று (டிச. 20) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கோரிக்கைவைத்தனர். இது சம்பந்தமாக பரிசீலனைச் செய்வதாக முதலமைச்சர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் நரேந்திர மோடி- நுயேன் ஜுவான் புக் இடையே உச்சி மாநாடு