ETV Bharat / state

'ஈபிஎஸ், ஓபிஎஸ் செய்ததை அன்புமணி செய்கிறார்' - உதயநிதி ஸ்டாலின் விளாசல் - கடலூர்

கடலூர்: "ஈபிஎஸ் ஓபிஎஸ்-சை டயர் நக்கி என்று வசைபாடிய அன்புமணி ராமதாஸ், அதிமுக கூட்டணியில் சேர்ந்து அவரும் அதையே செய்து கொண்டிருக்கிறார்" என்று, உதயநிதி ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
author img

By

Published : Mar 24, 2019, 5:42 PM IST

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களைவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால், தமிழ்நாடு முழுவதும் அரசியல் தலைவர்களின் பரப்புரை கூட்டம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், இன்று கடலூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ் ரமேஷை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

உதயநிதி ஸ்டாலின், வாகனத்தில் நின்றப்படியே புதுப்பேட்டை பகுதியில் இருந்து பண்ருட்டி நகரம், நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காடாம்புலியூர், சத்திரம், நடுவீரப்பட்டு, பாலூர் நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிர பரப்புரை செய்தார்.

அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி மோடியின் கீழ் நடக்கும் அடிமை ஆட்சியாக இருக்கிறது. எடப்பாடி ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாகியுள்ளது. இதற்கு பொள்ளாச்சி சம்பவமே சாட்சி. நீட் தேர்வால் நமது தங்கை அனிதாவை இழந்து விட்டோம். அதை நாம் மறக்க கூடாது. ஈபிஎஸ் ஓபிஎஸ்-சை டயர் நக்கி என்று கூறிய அன்புமணி ராமதாஸ்தான், தற்போது அந்த கூட்டணியில் சேர்ந்து டயர் நக்கி கொண்டிருக்கிறார் என்று கடுமையாக விமர்சித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வதை செய்யக் கூடியவர். கண்டிப்பாக நீட் தேர்வை ரத்து செய்வார். மக்களின் வில்லனாக இருக்கும் மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். எடப்பாடி அரசு தங்களது சுயலாபத்திற்காக தமிழக மக்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அடமானம் வைத்து கூட்டணி அமைத்து உள்ளது. மக்கள் எல்லாம் சிந்தித்து தங்கள் வாக்களிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.

*மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெறும் ஆட்சிகளால் நாட்டுக்கு எந்த பலனுமில்லை குறிப்பாக மாநிலத்தில் நடைபெறும் ஆட்சியால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை திரைப்பட நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடலூரில் பிரச்சாரம்.*

கடலூர்
மார்ச் 24,

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் இன்று கடலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ் ரமேஷ் அவர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் புதல்வரும் திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார் அண்ணாகிராமம் ஒன்றியம் புதுப்பேட்டை பகுதியில் துவங்கி பண்ருட்டி நகரம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காடாம்புலியூர் அதைத்தொடர்ந்து சத்திரம், நடுவீரப்பட்டு , பாலூர் நெல்லிக்குப்பம் பல்வேறு பகுதிகளிலும் வாகனத்தில் இருந்த படியே தீவிர பிரசாரம் மேற்கொண்டார் தற்போது இந்திய அளவில் நடக்கக்கூடிய இந்த ஆட்சி மக்களுக்கு எந்த விதத்திலும் பயனுள்ளதாக அமைய வில்லை எனவும் பொருளாதாரத்தில் இந்தியா மிகப்பெரிய அளவில் பின்தங்கி விட்டதாகவும் மதிப்பீட்டு சம்பவத்தை தொடர்ந்து ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகப்பெரிய அளவில் பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளதாகவும் ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழில் புரிவோர் நசுங்கி விட்டதாகவும் பல்வேறு காரணங்களை எடுத்துரைத்தார். 

மேலும் தமிழகத்தில் தற்போது நடந்து வரும் எடப்பாடி ஆட்சி பெண்களுக்குபாதுகாப்பு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் பொள்ளாச்சி சம்பவம் இதற்கு சாட்சி எனவும் தெரிவித்தார் மேலும் நிர்மலாதேவி சம்பவம் அமைச்சர் ஜெயக்குமார் சம்பவம் தொடர்ந்து பெண்கள் சார்ந்த விஷயங்களில் இந்த ஆட்சியின் அவலங்களை வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளதாகவும்  எடப்பாடி அரசு தங்களது சுயலாபத்திற்காக தமிழக மக்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அடமானம் வைத்து கூட்டணி அமைத்து உள்ளதாகவும் இதற்கெல்லாம் மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக செல்வதாகவும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் கல்வி கடன் ரத்து செய்யப்படும் நமது உரிமைகளை மீட்டெடுக்கப்படும் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

எனவே மக்கள் எல்லாம் சிந்தித்து தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளிக்க  வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Video send ftp
File name: TN_CDL_01_24_UDHAYANIDI_STALIN_7204906
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.