ETV Bharat / state

சடன் பிரேக் அடித்த ஓட்டுநர்... தூக்கி வீசப்பட்ட தாய் மற்றும் கை குழந்தை... பதறவைக்கும் சிசிடிவி காட்சி

கடலூரில் தனியார் பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்த நிலையில் படிக்கட்டு அருகே இருந்த தாய், தனது கை குழந்தையுடன் பேருந்தின் வெளியே தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Etv Bharat பேருந்தில் இருந்து விழுந்த தாய் மற்றும் குழந்தை

author img

By

Published : Oct 15, 2022, 6:01 PM IST

Updated : Oct 15, 2022, 7:06 PM IST

கடலூரில் இருந்து பண்ருட்டி, சிதம்பரம், புதுச்சேரி பகுதிகளுக்கு அரசு பேருந்துகளை காட்டிலும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக தனியார் பேருந்துகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுவதால் மின்னல் வேகத்தில் பேருந்துகள் செல்வது வழக்கமாக உள்ளது.

தனியார் பேருந்துகள் நகரப் பகுதிகளுக்குள்ளும் மின்னல் வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று (அக்.14) பிற்பகல் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து நெல்லிக்குப்பம் நகர பகுதிகளுக்குள் மிக வேகமாக வந்தது. அப்போது, எதிரே வந்த சைக்கிளன் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென பேருந்து ஓட்டுநர் பிரேக் அடித்தார்.

அப்போது, படிக்கட்டின் அருகே கை குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண் படிக்கட்டு வழியாக தூக்கி வீசப்பட்டு பேருந்துக்கு வெளியே வந்து தலைக்குப்பற விழுந்தார். இதைக் கூட பார்க்காமல் உடனடியாக பேருந்தை ஓட்டுநர் பேருந்தை இயக்கத் தொடங்கிய நிலையில் அருகில் உள்ளவர்கள் சத்தம் போட்டு பேருந்தை நிறுத்தினர்.

பின்னர், அந்த தாயையும் குழந்தையும் மீட்டனர். தாய்க்கு லேசான காயமும், குழந்தைக்கு அதிகப்படியான காயமும் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவர்கள் நெல்லிக்குப்பம் நகரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று விடு திரும்பினர்.

பேருந்தில் இருந்து விழுந்த தாய் மற்றும் குழந்தை

இந்த பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து அந்த பெண் எந்த ஒரு புகாரும் காவல் நிலையத்தில் அளிக்காததால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இருந்தாலும் இந்த பரபரப்பு டிடிவி காட்சிகள் தற்போது அதிகளவில் பரவி வரும் நிலையில் தனியார் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இதையும் படிங்க: மின்கம்பம் விழுந்து சிறுமி உயிரிழப்பு.. ஊர் மக்கள் போராட்டம்..

Last Updated : Oct 15, 2022, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.