கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, வடலூர் பேரூராட்சிகளில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கிருமிநாசினி மருந்து தெளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் கரோனோ வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்ததாக அரசு தரப்பில் பேட்டி மட்டுமே அளித்து வருவதாகவும், அதற்குரிய செயல்பாடுகள் இல்லை எனவும் கூறினார்.
மேலும் கரோனோ வைரஸை ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே பரப்பி வருவதாக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத் துறை செயலாளரும் மக்களிடையே தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு கரோனோ நிவாரண நிதியாக குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதை அதிமுகவினர் அவரவர்களது கட்சி நிதியிலிருந்து வழங்குவது போல் கட்சி நிர்வாகிகள் நின்று கொண்டு பொதுமக்களுக்கு வழங்கிவருகின்றனர் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க...கரோனா அச்சம்: உணவுப் பொருள்கள் விலை வீழ்ச்சி!