ETV Bharat / state

10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவு பெறும் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம்! - புதுப்பொலிவு பெறும் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம்

கடலூர்: பத்து ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படவுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம்
சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம்
author img

By

Published : May 18, 2021, 9:05 AM IST

கடலூர் சட்டப்பேரவை உறுப்பினருக்கான அலுவலகம் சில்வர் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. கடந்த பத்து வருடங்களாக கடலூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் அதை பயன்படுத்தாத நிலையில், அது அப்படியே பூட்டிக் கிடந்தது.

இதனால், கடலூர் நகர மக்கள் கடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பிரச்னைகளை சட்டப்பேரவை உறுப்பினரை நேரடியாக சந்தித்து தெரிவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தற்போது, புதிய சட்டப்பேரவை உறுப்பினரான கோர் ஐயப்பன், புதிய கட்டடத்தில் பணியை தொடங்க உள்ளதாகவும், பொதுமக்களின் குறைகளை இங்கு வந்து தெரிவிக்கலாம் என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பயன்பாட்டில் இல்லாத கட்டடத்தை புதுப்பிக்கும் பணி இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாள்களில் கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை திறந்து பொதுமக்களின் மனுக்களை பெற்று அதற்கு தீர்வு காண்பேன் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆக்சிஜன் வருகைக்காக அதிகாலை வரை காத்திருந்த அமைச்சர் - மதுரை மருத்துவமனையில் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.