ETV Bharat / state

"வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பேரிடர் மீட்புக்குழு தயார்" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

northeast monsoon disaster recovery: கடலூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ளும் விதமாகப் பேரிடர் மீட்புக் குழுக்களுக்கு இடையான தகவல் தொடர்பை மேம்படுத்த 125 வாக்கி டாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

northeast monsoon disaster recovery
"வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ள பேரிடர் மீட்புக்குழு"
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 2:28 PM IST

"வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ள பேரிடர் மீட்புக்குழு"

கடலூர்: வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க முதலமைச்சர் தலைமையில் கடந்த 19-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அது குறித்த ஆய்வுக் கூட்டம் தற்போது நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மாவட்டமாக உள்ளது. 57 கிலோ மீட்டர் கடற்கரையும், 5 ஆறுகளின் வடிகால் நிலமாகவும் கடலூர் மாவட்டம் உள்ளதால் இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் மிகவும் அதிகம் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 22 பகுதிகளும், அதிகம் பாதிக்கக் கூடிய பகுதிகளாக 39 பகுதிகளும், மிதமாகப் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 20 பகுதிகளும், குறைவாகப் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 158 பகுதிகள் என மொத்தம் 239 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பகுதிகள் அனைத்திலும் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள 28 புயல் பாதுகாப்பு மையங்களில் 8,400 நபர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில் 15 ஆயிரத்து 800 நபர்களும், 191 தற்காலிக தங்கும் இடங்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 875 நபர்கள் தங்கும் அளவிற்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் அலுவலர்களுக்கு இடையான தகவல் தொடர்பை மேம்படுத்த 125 வாக்கி டாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. 35 கம்பி இல்லா தொலைத் தொடர்பு கருவிகளும், 2 செயற்கைக்கோள் தொலைப்பேசிகளும் தயார் நிலையில் உள்ளது. இதே போலக் குடிசை வீடுகள், மண் சுவர்கள் உள்ள வீடுகள் கண்டறியப்பட்டு கனமழை பெய்யும் காலங்களில் அவர்களை வேறு இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல 125 நீச்சல் வீரர்கள், 260 பாம்பு பிடி வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கால்நடைகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அவற்றுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருவா மூக்கு திட்டத்துக்கான பணிகள் ஓரிரு மாதத்தில் தொடங்கப்படும். அதற்கான ஆணை விரைவில் வழங்கப்படும்" என்று கூறினார்.

முன்னதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறைகள் மூலம் பேரிடர் மீட்பு உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கடலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், கடலூர் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.