கடலூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் கடலூர் கோட்டச்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகதீஸ்வரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய எம்.சி. சம்பத், “தமிழ்நாடு அரசு வலிமையான அரசு. மக்கள் நலன் காக்கும் அரசு.பெண்கள் மீது அக்கறை கொண்ட அரசு. அதிமுக அரசின் திட்டங்கள் அடித்தட்டு மக்களையும் சென்றடைந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறும் சூழ்நிலையை உருவாக்கி தந்தவர் எடப்பாடியார். அரசின் திட்டங்கள் நிறைவாக உள்ள மாவட்டம் கடலூர். இயற்கைப் பேரிடர்கள் நிறைந்த இந்த மாவட்டத்தில், இடர்பாடுகள் இல்லாமல் தடுக்க நிரந்தர முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராமநாதபுரம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கியதைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்