ETV Bharat / state

கடலூரில் பாக்கெட் சாராயம் விற்றவர் கைது - Cuddalore Pocket Liquor

கடலூர்: ஊரடங்கால் மதுபானக் கடைகள் மூடப்பட்ட நிலையில் கடலூரில் பாக்கெட் சாராயம் விற்றவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

பாக்கெட் சாராயம் விற்றவர் கைது
பாக்கெட் சாராயம் விற்றவர் கைது
author img

By

Published : Apr 16, 2020, 9:17 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகளைத் தவிர டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டு உள்ளன.

இதனால் மது பிரியர்கள் மது கிடைக்காமல் போதை தரக்கூடிய பொருள்களை உபயோகித்து இறக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடலூர் பகுதியில் பாக்கெட் சாராயம் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி உத்தரவின்பேரில் காவல் துறையினர் கடலூரில் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது புதுப்பாளையம் பகுதியில் நடத்திய சோதனையில் முருகன் என்பவர் கள்ளச்சாராயத்தை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அவரை பிடித்த காவல் துறையினர் புதுநகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு - வாழ்வாதாரமின்றி வாடும் வெள்ளரிக்காய் விவசாயிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.