ETV Bharat / state

காதலுக்கு பாதுகாப்பு! காவல்நிலையத்தில் புகார் ! - petition

கடலூர் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி மனு அளித்தனர்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி மனு
author img

By

Published : Jul 26, 2019, 6:45 PM IST

Updated : Jul 26, 2019, 7:25 PM IST

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜவேலு என்பவரின் மகன் செந்தமிழ்ச்செல்வன் (22). பிஎஸ்சி பட்டதாரியான இவர் B. முட்லூர்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்திவந்துள்ளார். இச்சூழலில் அதே பகுதியைச் சேர்ந்த முபீனா(22) என்ற பெண் அவருடைய கடைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதனையடுத்து, முபீனா தன் காதலை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முபீனாவின் பெற்றோர்கள் வேறு மாப்பிள்ளை தேடிவந்தனர். இதனைத் தொடர்ந்து முபீனா தன் காதலன் செந்தமிழ்ச்செல்வனை கோவைக்கு அழைத்துச் சென்று கடந்த 23ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு இருவரும் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ”முறைப்படி பதிவுத் திருமணம் செய்துகொள்ள எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. இதுதவிர பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் முபீனாவை காணவில்லை என்று அவர்கள் குடும்பத்தினர் பொய் புகார் கொடுத்திருக்கிறார்கள். எங்களுக்கு நடந்த திருமணம் எங்களது சுய விருப்பத்தின் பேரிலேயே நடைபெற்றது எனவே உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

Intro:கடலூரில் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி மனுBody:கடலூர்
ஜூலை 26,

கடலூரில் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி மனு அளித்தனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்கா மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜவேலு என்பவரின் மகன் செந்தமிழ்ச்செல்வன் (22) பிஎஸ்சி பட்டதாரியான இவர் B. முட்லூர்பகுதியில் ஜெராக்ஸ் கடையை நடத்தி வந்துள்ளார் அதே பகுதியைச் சேர்ந்த முபினா(22) என்ற பெண் அவருடைய கடைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் அது காதலாக மாறியது.

இந்நிலையில் முபினா காதலை தன் பெற்றோரிடம் கூறியுள்ளார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முபினாவின் பெற்றோர்கள் வேறு மாப்பிள்ளை தேடி வந்தனர் இதனை தொடர்ந்து முபீனா தன் காதலன் செந்தமிழ்ச்செல்வன் ஐ கோவைக்கு அழைத்துச் சென்று கடந்த 23 ஆம் தேதி சமூக நீதி இளைஞர் சங்கத்தின் சார்பில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியதாவது; நானும், என் கணவரும் சேர்ந்து முறைப்படி பதிவுத் திருமணம் செய்துகொள்ள
அதற்கு ஏற்பாடுகளும் செய்து வருகிறோம். அதற்கு கால அவகாசம் தேவையாக உள்ளது. இந்நிலையில் என் குடும்பத்தில் என் தாய், தந்தை மற்றும் உறவினர்களால் என் உயிருக்கும், என் கணவர் செந்தமிழ்செல்வன் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதுதவிர பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் 'என்னை காணவில்லை' என்று எனது குடும்பத்தினர் பொய் புகார் கொடுத்திருப்பதாக தெரிய வருகிறது. மேலும் எனக்கும், என் கணவருக்கும் நடைபெற்ற திருமணம் எனது சுய விருப்பத்தின் பேரிலேயே நடைபெற்றது. இதில் யாருக்கும் எவ்வித தொடர்பும், தூண்டுதலும் கிடையாது. ஆகவே அய்யா அவர்கள் எனக்கும், என் கணவரின் உயிருக்கு எந்தவித
ஆபத்து ஏற்படாவண்ணம் உரிய பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என மனுவில் கூறப்பட்டிருந்தது.Conclusion:
Last Updated : Jul 26, 2019, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.