ETV Bharat / state

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக உள்ளது - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கடலூர்: 46 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது ஆளுங்கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதை காட்டுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கே பாலகிருஷ்ணன்
author img

By

Published : May 12, 2019, 11:27 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "மாநில தேர்தல் ஆணையம் 46 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் 13 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் பெண் அலுவலர் நுழைந்தது போன்ற சம்பவங்கள் தேர்தல் ஆணையம் மேல் வைத்த நம்பிக்கையை இழக்க வைக்கிறது.

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக உள்ளது - கே.பாலகிருஷ்ணன்

கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறது என்ற எண்ணம் தோன்றுகிறது. வருகிற 23-ஆம் தேதி மத்தியிலும் மாநிலத்திலும் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்" என்றார்.

தேர்தல் ஆணையம்  ஆளுங்கட்சியின் கைப்பாவையாக உள்ளது - கே பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு 

கடலூர் 
மே 12,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டது. மாநில தேர்தல் ஆணையம் 46 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தது ஆனால் தலைமை தேர்தல் ஆணையம் 13 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்தது போன்ற சம்பவங்கள் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாத் தன்மை கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறது என்ற எண்ணம் தோன்றுகிறது.

வருகிற 23-ஆம் தேதி மத்தியிலும் மாநிலத்திலும் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்யவில்லை உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் மக்கள் பிரதிநிதிகள் மக்களின் பிரச்சினையை தீர்த்து இருப்பார்கள் வருகிற ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும் ஆனால் அதற்கான வழி இல்லை தமிழகத்தில் நீர்நிலைகளை சரியாக பராமரிப்பு செய்யாத அரசாக உள்ளது. நீர் நிலைகளை தூர்வாரப்பட்டு இருந்தால் தண்ணீர் வீணாக கடலுக்கு சென்று இருக்காது தற்போது யாகம் வளர்த்தால் மழை வரும் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? இது அரசின் பொறுப்பற்ற நிலையை காட்டுகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது மக்களிடம் எந்தவித கருத்தும் கேட்காமல் டெல்டா மாவட்டங்களில் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கியது கண்டிக்கத்தக்கதாகும். ஹைட்ரோகார்பன் திட்டத்தை மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் செயல்படுத்த வேண்டாம் மக்கள் தொகை நெருக்கம் இல்லாத இடங்களில் அனுமதி வழங்கலாம்.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற ஜூலை 5ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனைத்துக் கட்சி பிரமுகர்களை சேர்த்து மிகப் பெரிய விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெறும்.

கருவேப்பிலங்குறிச்சியில் மாணவி திலகவதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது நாலு நாள் பெண்கள் மீது பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் மேலும் மாணவியின் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

இடைத்தேர்தலுக்கு ஆளும் கட்சியினர் தொகுதிக்கு 150 கோடி ரூபாய் வரை செலவு செய்கின்றன இத்தகைய தொகுதி மேம்பாட்டிற்கு செலவு செய்திருந்தால் மக்களது பயன் அடைந்து இருப்பார்கள் எனக் கூறினார்.

Video send ftp
Filename: 
TN_CDL_03a_12_KB_PRESS MEET_7204906
TN_CDL_03b_12_KB_PRESS MEET_7204906
TN_CDL_03c_12_KB_PRESS MEET_7204906

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.