கடலூர்: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை சரிவடையத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக, தொற்று பாதிப்பு குறைவாகவுள்ள 27 மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மக்கள் மீண்டும் பழையபடி வெளியே சுற்றத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஜூன்.13) ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகம் மீன்பிடித் தளத்தில் மீன் வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் எனப் பலர் ஒரே நேரத்தில் ஒன்று திரண்டனர். முகக்கவசம் அணியாமலும், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இங்கு மக்கள் உலாவினர்.
நேற்று (ஜூன்.12), மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மீன் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிந்தும், தனி மனித இடைவெளியைப் பின்பற்றியும் வாங்க வேண்டும் என்றும், அதனை கடைக்காரர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்த நிலையில், இன்றே விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டம் திரண்டது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு!