கடலூரில் தேசிய அளவிலான ஏழாம் ஆண்டு வில்வித்தை போட்டிகள் கடலூர் மாவட்டம். தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதுமிருந்து 250க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக சென்னை, விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஆறு வயது முதல் 20 வயது வரை உள்ள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தேசிய அளவில் நடைபெறும் வில்வித்தைப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்
இதையும் படிங்க:மாவட்ட அளவிலான வில்வித்தைப் போட்டி: வீரர்கள் ஆர்வம்!