ETV Bharat / state

நேரடி நெல் விதைப்பு - விவசாய தொழிலாளர்கள் எதிர்ப்பு - டி.எஸ்.பி மீது தாக்குதல், காவல்துறை குவிப்பு

author img

By

Published : Jun 28, 2022, 7:42 AM IST

Updated : Jun 28, 2022, 9:02 AM IST

மயிலாடுதுறை அருகே நேரடி நெல் விதைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து விவசாய தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் தொழிலாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூலி விவசாய தொழிலாளர்கள் எதிர்ப்பு
கூலி விவசாய தொழிலாளர்கள் எதிர்ப்பு

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா மேலபருத்திக்குடி கிராமத்தில் நில உரிமைதாரர்களுக்கும், கூலி விவசாய தொழிலாளர்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாக விவசாய கூலி பிரச்சினை நடந்து வருகிறது. இந்நிலையில் ஒருவாரத்திற்கு முன் நில உரிமையாளர் ஒருவர், தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்து உள்ளார்.

இதனை எதிர்த்து விவசாய கூலி தொழிலாளிகள்' அந்த நிலத்தில் இறங்கி, நெல் விதைகளை மிதித்து நாசப்படுத்தினர். இதனால் மற்ற நில உரிமையாளர்கள், விவசாய கூலி தொழிலாளர்கள் எதிர்ப்பதை தடுக்க கோரி, மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் மனு கொடுத்தனர்.

இதுதொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் ஒத்துகொள்ளவில்லை. மேலும், அதே பகுதியில் நேற்று கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்ய பாதுகாப்பு கோரியதால், காவல்துறை ஏடிஎஸ்பி சுவாமிநாதன், மற்றும் தங்கவேல், தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, நேரடி நெல் விதைப்பு நடைபெற்றது.

நேரடி நெல் விதைப்பு - விவசாய தொழிலாளர்கள் எதிர்ப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் விவசாய கூலி தொழிலாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாய கூலி தொழிலாளர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தாக்கப்பட்டார். இதனையடுத்து ் நேரடி நெல் விதைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த 50 விவசாய கூலி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க : மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் - அமைச்சர் செந்தில் பாலாஜி

Last Updated : Jun 28, 2022, 9:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.