ETV Bharat / state

ஒரு சமுதாயத்தினரை இழிவாக பேசி வீடியோ வெளியிட்ட நபர் மீது குண்டர் சட்டம்!

கடலூர்: வாட்ஸ் அப்பில் ஒரு சமுதாயத்தைப் பற்றி இழிவாக பேசி வீடியோ வெளியிட்ட நபர் மீது காவல் துறையினர் குண்டர் சட்டம் பதிவு செய்துள்ளனர்.

In Cuddalore person arrested under kundass
author img

By

Published : Apr 25, 2019, 7:17 PM IST

கடந்த 19ஆம் தேதி பாமக நகரத் துணைச் செயலாளர் மணிமாறன், விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தங்கள் சமுதாயத்தினரை பற்றி தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வருவதாகவும், அந்த வீடியோவை வெளியிட்ட நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் மீது விசாரணை நடத்தியதில் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் ஒரு சமுதாயத்தை இழிவாகப் பேசிய வீடியோ வெளியிட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிவக்குமாரை விருத்தாசலம் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் சிவக்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆணையிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்பில் ஒரு சமூகத்தைப் பற்றி இழிவாக பேசி வீடியோ அனுப்பிய நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.

கடலூர்
ஏப்ரல் 25,

கடந்த 19ம் தேதி பாமக நகரத் துணைச் செயலாளர் மணிமாறன் என்பவர் விருத்தாசலம் காவல் நிலையத்தில்  ஒருவர் தங்கள் சமூதாயத்தை பற்றி  தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வருவதாகவும் மற்றும் வீடியோ அனுப்பிய நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு விருதாச்சலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

பின்னர் புகாரை பெற்றுக்கொண்ட விருதாச்சலம் காவல் ஆய்வாளர் சாகுல்ஹமீது விசாரணை மேற்கொண்டார். அப்போது விசாரணையில் விருதாச்சலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் ஒரு சமூகத்தை இழிவாக பேசிய வீடியோ வெளியிட்டது தெரியவந்தது இதனை அடுத்து சிவக்குமாரை விருத்தாசலம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் சிவக்குமாரை குண்டர் தடுப்பு காவலில் கைது செய்ய ஆணையிட்டார். இதனை தொடர்ந்து சிவகுமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.