கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மா.ஆதனூர் பகுதியில் திருநாளைப்போவார் அவதார சன்னதியில், தமிழ் சேவா சங்கமும், சிவகுலத்தார் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் நந்தனார் மகா குருபூஜை மற்றும் உபநயப் பெருவிழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
இவ்விழா மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின், நந்தனாருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மா.ஆதனூர் பகுதியில் அமைக்கப்பட்ட மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
-
“சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட சமூக நீதி பற்றிய குரல்கள் மிகுதியாக ஒலிக்கும் வேளையில், நமது பட்டியலின சகோதர, சகோதரிகள் நாளுக்கு நாள் பாகுபாடுகளை எதிர்கொள்வது வெட்கக்கேடானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது." - ஆளுநர் ரவி pic.twitter.com/ahAROYdQ0z
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">“சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட சமூக நீதி பற்றிய குரல்கள் மிகுதியாக ஒலிக்கும் வேளையில், நமது பட்டியலின சகோதர, சகோதரிகள் நாளுக்கு நாள் பாகுபாடுகளை எதிர்கொள்வது வெட்கக்கேடானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது." - ஆளுநர் ரவி pic.twitter.com/ahAROYdQ0z
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 4, 2023“சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட சமூக நீதி பற்றிய குரல்கள் மிகுதியாக ஒலிக்கும் வேளையில், நமது பட்டியலின சகோதர, சகோதரிகள் நாளுக்கு நாள் பாகுபாடுகளை எதிர்கொள்வது வெட்கக்கேடானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது." - ஆளுநர் ரவி pic.twitter.com/ahAROYdQ0z
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 4, 2023
அதனைத் தொடர்ந்து கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 501 அனைத்து சமூகத்தைச் சேர்ந்த இந்து சமய சிவனடியார்களுக்கு உபநயனம் செய்து, பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி ஆளுநர் முன்னிலையில் நடைபெற்றது.
இதனையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், “வேதத்தில் நாம் யாரும் உயர்ந்தோரோ அல்லது தாழ்ந்தாரோ இல்லை. அனைவரும் சமமானவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. மனிதர்கள்தான் பிரிவை உண்டாக்கிக் கொண்டு நான் பெரியவன், நீ பெரியவன் என்று கூறுகின்றனர்.
ஒரு மாபெரும் பிரிவை ‘சூத்திரர்கள்’ என்று ஒதுக்கி வைத்தார்கள். இது மிகவும் அவமானமற்ற செயலாகும். இந்த நாட்டில் நான் பார்க்கிறேன், எந்த அளவிற்கு சாதிய வன்கொடுமை தலைதூக்கி இருக்கிறது என்றால், வேங்கை வயல் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிக்கின்ற குடிநீர் தொட்டியில் மலம் கலக்கின்றனர்.
மேலும், நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவன் நன்றாக படிக்கிறான் என்று ஆசிரியர் கூறியதற்காக, மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் அந்த மாணவன் வீட்டிற்குச் சென்று தாக்கினர். இந்த மாதிரி சாதிய வன்கொடுமைகள் தமிழ்நாட்டில்தான் அதிகரித்து வருகிறது.
மேலும், பள்ளியில் படிக்கின்ற சிறுவர்கள் தங்கள் சாதியை அடையாளப்படுத்தும் வகையில் கையில் சாதிக் கயிற்றைக் கட்டி வருகின்றார்கள். இது எந்த மாதிரியான கலாச்சாரம்? தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒரே ஒரு காரணத்திற்காக ஊராட்சி மன்றத் தலைவர் இந்துமதி வெற்றி பெற்றும், பதவியில் அமர முடியாத சூழல் இங்கு உள்ளது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கின்ற தாக்குதல் மற்றும் வன்கொடுமை வழக்குகளில், தண்டனை உடனடியாக கிடைப்பதில்லை. இதனால் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வயலில் களை விளைந்திருந்தால், அதனை மட்டும்தான் அகற்ற வேண்டுமே தவிர, அதற்காக ஒட்டு மொத்த பயிரையும் அழிக்க நினைப்பது தவறு.
சனாதனம் ஏற்றத்தாழ்வுகளை போதிக்கவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட சமூக நீதி பற்றிய குரல்கள் மிகுதியாக ஒலிக்கும் வேளையில், நமது பட்டியலின சகோதர, சகோதரிகள் நாளுக்கு நாள் பாகுபாடுகளை எதிர்கொள்வது வெட்கக்கேடானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார்.
இதையும் படிங்க: மதுரையில் வரும் 50 ஆண்டுகளுக்கு தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும் யோசனை என்ன?