தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், ஆங்காங்கே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளிலும் முறையான குடிநீர் இல்லை எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை குறித்து செய்தி சேகரிக்க தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் சென்றுள்ளார்.
அப்போது அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளரின் கேமராவை பறித்தும், இது குறித்த செய்தியை சேகரிக்க விடாமலும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது குறித்து செய்தியை வெளியிடக் கூடாது என மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மீது ஆசிரியர்கள் தாக்குதல் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக்கியுள்ளது.