ETV Bharat / state

'அண்ணாமலை திமுகவை குறை சொல்வது அவசியம் இல்லை' கே.எஸ்.அழகிரி - NLC should be given proper place

என்எல்சி-க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இடமும் வேலையும் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி பேட்டி
கே.எஸ்.அழகிரி பேட்டி
author img

By

Published : Dec 8, 2022, 11:33 AM IST

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கெடியேற்று விழா நேற்று (டிச.7) நடைபெற்றது. இவ்விழா தெற்கு மாவட்ட துணை தலைவர் நசீர் அகமது தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு கொடியேற்றினார். முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசு மக்களுக்கு இழைக்கும் அநீதிகளை பற்றியும், ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தின் சிறப்பினையும் எடுத்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிறகு நடைபெற்ற கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதாவிற்கு சாதகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் கட்சி வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படுதல் தேவையில்லை. ஒரு பின்னடைவு ஏற்பட்டால் மேலும் மக்களுக்கு உழைத்து, அவர்களை மேம்படுத்த வேண்டும் என்று கருத வேண்டும் என்றார்.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கெடியேற்று விழா

தமிழ்நாடு அரசு விவசாய நிலங்களை அத்திக்கடவு திட்ட மூலம் தரிசு நிலங்கள் கைப்பற்றி வருகிறது. இது கார்ப்பரேட் அரசு என்று பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இது சம்பந்தமாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அவிநாசி அத்திக்கடவு திட்டம் தமிழ்நாடு அரசு நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்சாலைகளுக்காக அளிக்கின்றது. நிலங்களை கையகப்படுத்துவது என்பது எவ்வாறு கையகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவிக்கிற வழிகாட்டுதலின்படி மாநில அரசு செயல்படுகிறது. எனவே குறைபாடுகள் இருந்தால் அண்ணாமலை, மோடியிடம் தான் கேட்க வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன. இதற்கு காரணம் பெருந்தலைவர் காமராஜர். கலைஞரும் ஒரு காரணம். மற்றவர்கள் அதை உரிமை கொண்டாடுகிற தகுதியே கிடையாது. தேசத்தில் ஏழு ஆண்டுகளில் கார்ப்பரேட்டுகளை உலக அளவில் வளர்த்திருப்பது மோடி அரசாங்கம் தான் என்றார்.

மத்திய அரசிடம் பிஎஸ்என்எல் மற்றும் ரயில்வே துறை இருந்தது. இப்பொழுது இரண்டும் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனங்கள். இன்றைக்கு இதையெல்லாம் தனியாருக்கு தாரைவார்த்தது மோடி அரசுதான். பிஎஸ்என்எல்-யை சாகடித்து அம்பானி கொண்டு வந்த ஜியோ என்ற பெயரை நிறுவி இருக்கிறார். அதேபோன்று ரயில்வேயை பணக்காரர்களுக்கு, ரயில் பெட்டிகளை மட்டுமல்ல ரயில்வே நிலையங்களை கூட பொதுவுடமையில் இருந்து தனி உடைமையாக ஆக்கியிருக்கிறார் என குற்றஞ்சாட்டினார்.

இதை எல்லாம் வட இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு, குறிப்பாக குஜராத் கார்ப்பரேட்டர்களுக்கு சென்று இருப்பதாக தெரிவித்த அவர், அண்ணாமலை போன்றவர்கள் மோடியை தான் குறை சொல்ல வேண்டும், திமுகவை குறை சொல்வது அவசியம் இல்லை என்றார்.

என்எல்சி-க்கு நிலம் கையகப்படுத்துவது தவறு ஒன்றும் இல்லை. பொதுமக்களை பாதிக்காதவாறு அவர்களுக்கு ஏற்ற வசதிகளை செய்து கொடுத்து நிலங்களை கையகப்படுத்த வேண்டும். நெய்வேலி விஷயத்தில் பலமுறை பேசி இருக்கின்றேன், நிலம் கையகப்படுத்துவதில் தவறில்லை என்றார்.

ஒரு ஏக்கர் நிலத்திற்கு அவர் விரும்புகின்ற இடத்தில் தண்ணீர் வசதியோடு அந்த நிலத்தை பெறுகிற வாய்ப்பை ஏற்படுத்தினால் அக்குடும்பம் சிறப்பாக வாழும். நாட்டு நன்மைக்காக நிலத்தை கொடுக்க சொல்லிவிட்டு குறைந்தபட்ச பணம் வழங்குவது என்பது நியாயமற்றது. இதனால் என்எல்சி-க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இடத்தில் விரும்புகிற இடத்தில் மாற்று இடத்தை வழங்க வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக ஒரு வேலையும் தர வேண்டும். இதை செய்தால் இந்தியாவில் நிலம் கையகப்படுத்துவதில் நடைபெறும் பிரச்சனை இருக்காது என்றார்.

இக்கூட்டத்தில் மாநில செயலாளர் சித்தார்த்தன், மாநில பொதுச்செயலாளர் சேரன் மற்றும் காட்டுமன்னார்கோவில் விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.