கடலூர் மீன்பிடித் துறைமுகத்தில் கடலூர் மட்டுமல்லாமல் விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மீன் வாங்க வியாபாரிகளும், கடலூரில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்களும் வருவது வழக்கம். இதனிடையே புரட்டாசி மாதம் என்பதால் கடந்த ஒரு மாத காலமாக மீன் விற்பனை மந்தமாக இருந்து வந்தது.
இந்த நிலையில், புரட்டாசி மாதத்தின் நான்கு சனிக்கிழமையும் நேற்றுடன் (அக் 15) நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று காலை முதலே இங்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குவியத் தொடங்கினர். அதேநேரம் கடலூர் துறைமுகத்தில் வழக்கமாக மீன் விற்கப்படும் அதே விலைக்கு இன்றும் மீன்கள் விற்கப்பட்டதால் பொதுமக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதன்படி குறைந்தபட்சமாக வஞ்சிரம் மீன் கிலோ ரூ.700, கருப்பு வவ்வால் கிலோ ரூ.300, சங்கரா மீன் ரூ.350, இறால் மற்றும் நண்டு ஆகியவை ரூ.300 என்கிற நிர்ணயத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: குட்டையில் மீன் பிடிக்கச்சென்ற 3 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு