ETV Bharat / state

மின்சார வாரியம் தனியார் மயமாக்கலை கண்டித்து ஆர்ப்பாட்டம்! - Farmers Protest In Cuddalore

கடலூர்: மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சங்கு ஊதி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Farmers Protest in Cuddalore
Farmers Protest in Cuddalore
author img

By

Published : Jul 27, 2020, 7:31 PM IST

கடலூர் மாவட்டம், குப்பன் குளம் பகுதியில் மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதையும் இலவச மின்சாரத்தை பறிப்பததையும் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மின் மோட்டார்களுக்கு மாலை அணிவித்து சங்கு ஊதி கறுப்புக்கொடி ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கோ.மாதவன், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலாளர் தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணை: முதலமைச்சர் வழங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.