கடலூர் மாவட்டம் அணுக்கம்பட்டுவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சொந்தமான 10 செனட் நிலத்தில் 2 செனட் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த தணிக்காசலம், ஆனந்த் ஆக்ரமித்துள்ளாகக் கூறிய ரமேஷ், குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்துக் கொண்டிருக்கும் போது தணிகாசலம், ஆனந்த் ஆகிய இருவரும் விவசாயி ரமேஷை தாக்கி, குடும்பத்தை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
புகார் கொடுக்க வந்த இடத்தில் தாக்குதலுக்கு ஆளானபோது காவல்துறையினர் கண்டுகொள்ளாததால் மனமுடைந்த ரமேஷ், காவல் நிலைய வாசலிலேயே களை கொல்லிக்கு எடுத்துச் செல்ல கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதையடுத்து காவல்துறையினர் மற்றும் உறவினர்கள் ரமேஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.