ETV Bharat / state

கடலூரில் ரவுடியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தலையை வெட்டி தூக்கிச் சென்ற கும்பல்! - Cuddalore Muder Cases

கடலூர்: பிரபல ரவுடி வீராவை அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டு, தலையை துண்டித்து தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை  ரவுடி வெட்டிக்கொலை  கடலூரில் இளைஞர் வெட்டிக் கொலை  கடலூர் கொலை வழக்குகள்  Famous rowdy murder in Cuddalore  rowdy murder  Cuddalore Muder Cases  A Youth Muder in Cuddalore
Famous rowdy murder in Cuddalore
author img

By

Published : Feb 17, 2021, 8:18 AM IST

Updated : Feb 17, 2021, 9:05 AM IST

கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகரைச் சேர்ந்தவர் வீரா (எ) வீராங்கையன் (30). பிரபல ரவுடியான இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணமானது. இவர் கடலூர் உழவர் சந்தை அருகில் பழக்கடை நடத்திவந்தார்.

இந்நிலையில், நேற்று (பிப்.16) இரவு வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வீராவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அவரது தலையை வெட்டி தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்ளும் காவல் துறையினர்

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் வீராவின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீராவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வீரா முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல ரவுடியை கொலை செய்து விட்டு, தலையை துண்டித்து தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு- குற்றவாளிகளுக்கு காவல்துறை வலைவீச்சு!

Last Updated : Feb 17, 2021, 9:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.