கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள எல்லப்பன் பேட்டை கிராமத்தில் உள்ள குடியிருப்பில் வசித்துவருவபர் தவிடன். அதே பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில், அவரது சகோதரர் ராஜு. சகோதரர்கள் இருவரும் ஆளில்லாத தவிடன் வீட்டில் அனுமதியின்றி நாட்டு பட்டாசு தயாரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஜூன். 21) பட்டாசு தயாரித்து கொண்டிருந்தபோது, வெடி வெடித்து விபத்துக்குள்ளானது. வெடிவிபத்தின் அதிர்ச்சியில் ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து, தகவலறிந்த காவல் துறையினர், தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது, குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி நாட்டு பட்டாசு தயாரித்துவந்த செந்தில், ராஜு அங்கியிருந்த தப்பினர்.
வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சகோதரர்களை தேடிவருகின்றனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீட்டில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த நபர் கைது