ETV Bharat / state

‘சமூகநீதிக்கு ஆபத்து என்றால் அதற்கு எதிர்குரல் கொடுப்பது அதிமுக மட்டுமே’ - முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்

author img

By

Published : Nov 26, 2019, 8:24 AM IST

கடலூர்: சமூகநீதிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அதற்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரே இயக்கம் அதிமுகதான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

edappadi

முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் செயல்பாடுகளைப் போற்றும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் ரூ.2.15 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், பாமக தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ”1980ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை 31 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக எம்ஜிஆர் உயர்த்தினார். பட்டியலினத்தவர்களுக்கும் பழங்குடியினருக்கும் சேர்த்து தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இதனை நிலைபெறச் செய்து சமூகநீதி காத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. 1993ஆம் ஆண்டில் சட்டம் இயற்றி அரசியலமைப்பு சட்டம் 9ஆவது அட்டவணையில் சேர்த்து அரசியலமைப்பு பாதுகாப்பு பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா.

எடப்பாடி பழனிசாமி பேச்சு

சமூகநீதிக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்து அதனைக் களையும் அரசு அதிமுகதான். வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாக அதிமுக உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்த இந்த ஆட்சி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ், சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் என்னை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். அது தற்போது அரசின் பரிசீலனையில் இருக்கிறது. இந்த அரசு இச்சமுதாயத்திற்கு எண்ணற்ற திட்டங்களைச் செய்யும் என்று உறுதி கூறுகிறேன்” என்றார்.

இதையும் படிங்க: ராமசாமி படையாட்சியார் உருவப் படம் திறப்பு!

Intro:சமூகநீதிக்கு ஆபத்து வரும் நேரம்போதெல்லாம் அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த அரசு அதிமுக தான்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிBody:முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

கடலூர்,
நவம்பர் 25,
சுதந்திர போராட்ட வீரரும், சமூக நீதிக்காக பாடுபட்டவருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு தமிழக அரசு சார்பில் கடலூரில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் 1.70 ஏக்கரில் ரூ.2.15 கோடியில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது. இந்த நினைவு மண்டப திறப்பு விழா நிகழ்ச்சிகள் கடலூரில் இன்று நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, ராமசாமி படையாட்சியாரின் நினைவு மண்டபத்தினை திறந்து வைத்தார். தொடர்ந்து, அவரது உருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அங்குள்ள நூலகத்தை திறந்து வைத்து, மரக்கன்று நட்டார்.
பின்னர், அருகில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு காரில் சென்றார். அங்கு நினைவு மண்டபத்திற்கான கல்வெட்டினைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது, இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்றால் வளர்ச்சிக்கு உரமாக இருப்பது விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகமும், வீரமும் தான் என்பதை மறந்து விடக்கூடாது. அந்த வகையில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். சுதந்திரத்திற்குப் பின்னர் 1952 ஆம் ஆண்டில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். முதல் தேர்தலிலேயே 19 எம்எல்ஏக்களை பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 4 எம்.பிக்கள் இவரது கட்சியிலிருந்து வெற்றி பெற்றனர். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திலும், நலனினும் அதிக அக்கறை எடுத்துக்கொண்டவர் படையாட்சியார்.
1954 முதல் 57 வரையில் பெருந்தலைவர் காமராஜரின் அமைச்சரவையில் இடம் பெற்றார். 1980 மற்றும் 1984 இல் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். ஏழை எளிய மக்கள் கல்வியைப் பெற்று தங்களது வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர். தன்மானத்தை எக்காலத்திலும் விட்டுக்கொடுக்காமல் அச்சாமலும், நகைச்சுவையாகவும் பேசுபவர். மக்கள் எந்நேரத்திலும் அவரை சந்திக்கும் தலைவராக இருந்தார்.
கடலூரில் ரயில் இருப்புப்பாதை அமைக்கவும், பேருந்து நிலையம், மருத்துவமனை, தொழிற்பயிற்சி நிலையம் அமைத்திட தனது சொந்த நிலத்தை அரசுக்கு அளித்தார். அந்த வகையில் அவரது குடும்பத்தினரும் ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தினை கடலூர் பேருந்து நிலையம் அருகில் சாலை அமைப்பதற்காக தற்போது வழங்கியுள்ளனர்.
20 குழந்தைகள் உள்ள கிராமத்தில் ஓராசிரியர் பள்ளியைத் துவக்கியவர் ராமசாமி படையாட்சியார். அந்த ஆசிரியர்களுக்கு ஊராட்சி நிர்வாகமே ஊதியம் தர வேண்டுமென நிர்ணயிக்கப்பட்டது. எனவே, அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென 26-9-2018 அன்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி விழாவும் கொண்டாடப்பட்டது.
நாட்டிற்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் பாடுபட்ட படையாட்சியாரை மேலும் சிறப்பிக்கும் வகையில் அவரது திருவுருப்படம் சட்டப்பேரவையில் என்னால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், அவரை பெருமைப்படுத்தும் வகையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்து தற்போது மண்டபம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை 31 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக எம்ஜிஆர் உயர்த்தினார். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு சேர்த்து தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இதனை நிலைப்பெறச் செய்து சமூகநீதி காத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 1993 ஆம் ஆண்டில் சட்டமியற்றி அரசியலமைப்பு சட்டம் 9 ஆவது அட்டவணையில்சேர்த்து அரசியலமைப்பு பாதுகாப்பு பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா.
சமூகநீதிக்கு ஆபத்து வரும் நேரும்போதெல்லாம் அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த அதனை களையும் அரசு அதிமுக தான்.
வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாக அதிமுக உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்த இந்த ஆட்சி தான் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறோம். சட்டமன்றத்தில் பல தலைவர்களது படம் உள்ளது. இதனைக் காணுகின்றபோது இவ்வளவு பெரிய சமுதாயத்தின் தலைவர் படம் இல்லையே என்று எண்ணி படையாட்சிரின் முழு உருவப்படம் திறக்கப்பட்டு இந்த மக்களுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.
சமூகத்திற்கு பாடுபட்டவர்களுக்கு புகழ் சேர்த்தால் தான் பின்னால் வருபவர்கள் சமுதாயத்திற்கு சேவை செய்வார்கள். அப்படிப்பட்ட தலைவர்களுக்கு அதிமுக அரசு பல்வேறு வகையில் உரிய மரியாதை செலுத்தி வருகிறது.
பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் என்னை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருந்துக் கொண்டிருக்கிறது. இந்த அரசு இச்சமுதாயத்திற்கு எண்ணற்ற திட்டங்களை செய்யும் என்று உறுதி கூறுகிறேன் என்றார்.
நிகழ்ச்சிக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி, இரா.துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன், சேவூர்ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.ஏ.பாண்டியன், சத்யாபன்னீர்செல்வம், நாக.முருகுமாறன், வி.டி.கலைச்செல்வன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பொ.சங்கர், ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, தலைமைச் செயலர் க.சண்முகம் வரவேற்க, ராமசாமி படையாட்சியாரின் மகன் எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ் நன்றி கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.