கடலூரில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி ஒரு சில கிராம மீனவர்கள் மீன்பிடித்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் கிராம மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் எம்ஜிஆர் திட்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுக்கு தீ வைத்தனர்.
இதனால் அங்கு பதட்டம் நீடித்ததைத் தொடர்ந்து ஏடிஎஸ்பி பாண்டியன், சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டது. இதைத்தொடர்ந்து மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் இந்த உத்தரவால் தங்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.