ETV Bharat / state

'உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்தாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்'

author img

By

Published : Dec 21, 2019, 7:58 AM IST

கடலூர்: உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்தாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று திமுக தேர்தல் பொறுப்பாளர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

dmk
திமுக தேர்தல் பொறுப்பாளர் தேர்தல் அதிகாரியிடம் மனு

கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த திமுக தேர்தல் பொறுப்பாளரும் மாதவரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சுதர்சனம், மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன், நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் சபா. ராஜேந்திரன், திமுக வழக்கறிஞர்கள் ஆகியோர் கூட்டாக சேர்ந்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புகார் மனுவை தேர்தல் அலுவலரிடம் அளித்தனர்.

பின்னர் திமுக தேர்தல் பொறுப்பாளர் சுதர்சனம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "நல்லூர் ஒன்றியத்தில் 19ஆவது வார்டில் போட்டியிட திமுக வேட்பாளர் கலைவாணி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவர் கையெழுத்தை போலியாக போட்டு அவர் மனுவை திரும்பப் பெற்றதாக அறிவித்துவிட்டு, அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர்.

திமுக தேர்தல் பொறுப்பாளர் தேர்தல் அதிகாரியிடம் மனு

இந்த அறிவிப்பை ரத்து செய்வதுடன் அந்த வார்டுக்கான தேர்தலை முறையாக நடத்தப்பட வேண்டும். ஆளுங்கட்சியினர் அலுவலர்களை மிரட்டி தேர்தலில் முறைகேடு செய்ய முற்படுவதை தடுக்க சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், உள்ளாட்சித் தேர்தலை நடுநிலைமையுடன் நியாயமாக நடத்தாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்” என்றார்.

இதையும் படிங்க: பாலியல் தொழிலுக்கு வர மறுத்த திருநங்கையின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்!

Intro:உள்ளாட்சித் தேர்தலை நடுநிலையுடன் நியாயமாக நடத்தாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் திமுக தேர்தல் பொறுப்பாளர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு
Body:கடலூர்
டிசம்பர் 20,
உள்ளாட்சித் தேர்தலை நடுநிலையுடன் நியாயமாக நடத்தாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என திமுக தேர்தல் பொறுப்பாளரும் மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சுதர்சனம் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்எல்ஏ நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் ஒன்றுகூடி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புகார் மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரி வெ.அன்புசெல்வனிடம் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்தில் 19வது வார்டு திமுக வேட்பாளர் கலைவாணியின் கையெழுத்தை போலியாக போட்டு மனுவை வாபஸ் பெற்றதாக அறிவித்துவிட்டு அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை ரத்து செய்வதுடன் அந்த வார்டுக்கான  தேர்தலை  நடத்தப்பட வேண்டும்.

கடலூர் ஒன்றிய தேர்தல் அதிகாரி அருளரசன் அதிமுகவினரால் தாக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுத்து தேர்தல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆளுங்கட்சியினர் அதிகாரிகளை மிரட்டி தேர்தலில் முறைகேடு செய்ய முற்படுவதை தடுத்து நிறுத்தி சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலின்  வாக்குப் பதிவை, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் சிசிடிவி கேமிரா வைத்து பதிவு செய்ய வேண்டும். அதே போல் வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பதுடன் நியாயமான நடுநிலையான உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும்.

மேற்கூறிய அதிமுகவின் அராஜக செயலை நீதிமன்றத்தை நாட உள்ளோம் மேலும் தேர்தல் அதிகாரி அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் இது குறித்து நீதிமன்றத்தில் அவர் பதில் கூற நேரிடும் என பேட்டி அளித்தார்.

பேட்டி -  மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ.
கடலூர் மேற்கு மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.