ETV Bharat / state

கடலூரில் டெங்கு! மருத்துவமனையில் டெங்கு அறிகுறியுடன் 35 பேர் அனுமதி!

கடலூர்: அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 35 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

dengue fever
author img

By

Published : Oct 17, 2019, 5:13 PM IST

கடலூர் மாவட்டம் முழுவதும் மர்மகாய்ச்சல் பரவி வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை டெங்கு, வைரஸ் உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சோகக்கதையும் நிகழ்ந்துள்ளது.

அதேபான்று இந்த ஆண்டும் வழக்கமாக ஏற்படும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு மட்டுமின்றி டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளது. எனவே, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை கொசு மருந்து அடிக்கும் நடவடிக்கையே எடுக்கப்படவில்லை.

கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதால் சாலை ஓரங்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஆங்காங்கே கழிவு நீரோடு, மழை நீரும் தேங்கி நிற்கிறது. இதனால் அதிகப்படியான கொசுக்கள் உற்பத்தியாகிறது. கொசுக்களின் உற்பத்தியை தடுக்க மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக அம்மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். கடலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் குழந்தைகளுக்கு மர்மக் காய்ச்சல் பரவி வருவதால் தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காக ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

கடலூரில் பரவும் டெங்கு காய்ச்சல்

இந்நிலையில், சிகிச்சைக்காக வந்தோர் கூறுகையில், வீட்டுக்குள் பரவும் கொசுக்களை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது. ஆங்காங்கே கழிவு நீர், மழை நீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகப்படியாக உள்ளன. காய்ச்சல் பரவாமல் தடுக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்

கடலூர் மாவட்டம் முழுவதும் 453 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் 35 பேர் டெங்கு அறிகுறியுடன் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 'சசிகலா அதிமுகவில் இணைவது சாத்தியமில்லை' - அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

Intro:கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 35 பேர் அனுமதிBody:கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 35 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

கடலூர் மாவட்டம் முழுவதும் மர்மகாய்ச்சல் பரவி வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவும் குழந்தைகள் முதல் முதியவர்களை வரை டெங்கு,வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல் ஏற்பட்டு பலர் உயிர் இழந்துள்ளனர் இந்த நிலையில்

இந்த ஆண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ஏற்படும் வைரஸ் காய்ச்சலில் இருந்து புதிதாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் அதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளில் மழைக்காலத்தில் எடுக்கப்பட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறிப்பிட்ட அளவு கூட இந்த ஆண்டு எடுக்கப்படவில்லை. கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதால் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே கழிவு நீரோடு, மழை நீரும் தேங்கி நிற்கிறது. இதனால் அதிகப்படியான கொசுக்கள் உள்ளன. கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை. இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் அதிக பாதிப்பு உள்ளது. குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டவுடன் பெற்றோர்கள் முதலில் அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதைத் நிலையிலும் காய்ச்சல் சரியாகாத நிலையில் தனியார் மற்றும் கடலூர் அரசு மருத்துவமனை செல்கின்றனர். இதனால் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காக ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

இதே போல் இன்று காலை கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தங்களை குழந்தைகளுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வந்தனர்

சிகிச்சைக்காக வந்தோர் கூறுகையில் கொசுக்கள் அதிகமாக உள்ளது. வீட்டுக்குள் கொசுக்களை கட்டுப்படுத்துவது முடியாததாகிவிட்டது. ஆங்காங்கே கழிவு நீர், மழை நீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகப்படியாக உள்ளது. காய்ச்சல் பரவாமல் தடுக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.

கடலூர் மாவட்டம் முழுவதும் 453 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் 35 பேர் டெங்கு அறிகுறியுடன் சிறப்பு தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.