கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கடலூர், விருதாச்சலம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வந்திருந்தனர்.
இதில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகளின் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. முன்னதாக ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக் கோரி முழக்கம் எழுப்பினர்.
மேலும், அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டனம் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சிஏஏ-ஐ பாடத்திட்டத்தில் இணைப்பதா? மாயாவதி காட்டம்