கடலூர், சிப்காட் பகுதியில் ’கிரிம்சன் ஆர்கானிக்’ என்ற தனியார் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் இன்று (மே.13) காலை கொதிகலனில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதில் பழைய வண்டி பாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார், செம்மங்குப்பம் பகுதியைச் சேர்ந்த கணபதி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த சபிதா, பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த விஷேஸ் ராஜ், ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்து கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், தொழிற்சாலையை உடனடியாக மூட வலியுறுத்தியும் அப்பகுதி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இவர்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிநவ் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை!