கடலூர் மாவட்டம், எய்தனூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரின் மகன் விக்கி என்ற விக்னேஷ்வரன் (25). இவர் கடந்த ஜூன் 28ஆம் தேதி இரவு காராமணிக்குப்பம், சண்முகசுந்தரம் காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள இந்தியா 1 ஏடிஎம் மையத்தை உடைத்துப் பணத்தை திருட முயன்றுள்ளார்.
இது சம்பந்தமாக ஏடிஎம் பொறுப்பாளர் அருள் என்பவர், கொடுத்தப் புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் வீரமணி விசாரணை மேற்கொண்டார்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட விக்கி (எ) விக்னேஷ்வரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது நெல்லிக்குப்பம், கடலூர், புதுநகர், திருப்பாதிரிப்புலியூர், மகாபலிபுரம் ஆகிய காவல் நிலையங்களில் 15 திருட்டு வழக்குகள் உள்ளன. எனவே, இவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பரிந்துரையின் பேரில், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, ஓராண்டுக் காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டார்.
அதன்பேரில் விக்னேஸ்வரன் ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.