ETV Bharat / state

அரசு பேருந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்! - வேப்பூர் பேருந்து விபத்து 20 பேர் படுகாயம்

கடலூர்: வேப்பூர் அருகே புளியமரத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

cuddalore veppur bus accident 1 dead 20 injury
அரசு பேருந்து விபத்து
author img

By

Published : Dec 15, 2019, 9:13 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து தருமபுரி நோக்கி அரசு பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றது. வேப்பூர் அருகே அடரி என்ற கிராமத்தில் கடலூர் - சேலம் சாலை வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தாறுமாறாக ஓடி அப்பகுதியில் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் பேருந்தின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது.

பேருந்தில் பயணம் செய்த கோவிந்தராஜ் (55) என்னும் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் விபத்தில் படுகாயமடைந்த 20 பயணிகளையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து புளியமரத்தில் மோதிய அரசு பேருந்தை கிரேன் மூலம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.

அரசு பேருந்து விபத்தில் 1 உயிரிழப்பு 20 பேர் படுகாயம்

இதையும் படியுங்க: நேபாளத்தில் பேருந்து விபத்தில் 14 பேர் உயிரிழப்பு - பலர் காயம்!

Intro:கடலூரில் புளியமரத்தின் மீது அரசுப் பேருந்து மோதி ஒருவர் பலி 20 பேர் படுகாயம்
Body:கடலூர்
டிசம்பர் 15,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே புளிய மரத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 20 பேர் படுகாயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து தர்மபுரி நோக்கி அரசு பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அடரி என்ற கிராமத்தில் கடலூர் சேலம் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது பின்பு அந்த பகுதியில் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது இதில் பேருந்தின் முன்பக்க பலத்த சேதமடைந்தது.

இதில் முன்பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்த கோவிந்தராஜ் (55) சம்பவ இடத்திலேயே உயிர் நசுங்கி பலியானார் மேலும் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் படுகாயமடைந்தனர் இச்சம்பவம் குறித்து சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் படுகாயமடைந்த 20 பயணிகளையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் புளிய மரத்தில் மோதிய அரசு பேருந்தை கிரேன் மூலம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் அப்புறப்படுத்தினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.