கடலூர் மாவட்டத்தில் இன்று (டிச. 13) இரண்டாம் நிலை காவலர் தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் 18 மையங்களில் 27 ஆயிரத்து 624 நபர்கள் தேர்வு எழுதினர். இதில் ஆண்கள் 23 ஆயிரத்து 581 நபர்களும் பெண்கள் ஐந்தாயிரத்து 432 நபர்களும், திருநங்கைகள் 11 நபர்களும் அடங்குவர். தேர்வு எழுதும் மையங்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அபிநவ் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது, காவலர் தேர்வு நேர்மையாக நடைபெறுவதாகவும் தேர்வு எழுதும் நபர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்
மேலும், "தேர்வு மையத்திற்கு அனுப்புவதற்கு முன்னதாக மாணவர்களை வெப்ப கருவிக் கொண்டு சோதனை செய்யப்பட்டு முகக் கவசம் அணிவிக்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டனர். கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் வந்தால் அவர்களுக்கு தனியாக தேர்வு எழுதவும் இடம் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது.
இப்பணியில் இரண்டாயிரத்து 100 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் வினாத்தாளில் 80 வினாக்கள் கொண்ட வினாக்களை 80 நிமிடத்தில் மாணவர்கள் எழுத வேண்டும். இதில் இளைஞர்கள், பெண்கள் காவலர் தேர்வில் எழுத ஆர்வமாக வந்து கலந்துகொண்டனர்” என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'கர்ணன்' தலைப்பு தனுஷ் படத்திற்கு ஏற்றதல்லை - சிவாஜி சமூக நலப்பேரவை