கடலூர்: முழு ஊரடங்கு காரணமாக இன்று (மே.16) இறைச்சி, மீன் கடைகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. பொதுவாக, தேவனாம்பட்டினம், தாழங்குடா, அக்கரை கோரி, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து, 200க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்து கடலூர் துறைமுக மீன்பிடி இறங்கு தளத்தில் வைத்து மீன் விற்பனை செய்வர்.
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கடலூர் துறைமுகப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், இன்று மீன்பிடிக்கச் செல்லாததால், மீன் ஏற்றிச் செல்லும் லாரிகளும் மீன்பிடி தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ரூ. 100-க்கு 500 அள்ளித் தந்த ஏடிஎம் - கமுக்கமாக பணமெடுத்த மக்கள்!