ETV Bharat / state

கடலூர் தாய்-மகள் கொலை வழக்கு - இளநீர் வியாபாரி கைது! - cuddalore district news

கடலூர்: இடையர்பாளையம் பகுதியில் தாய்- மகள் கொலை வழக்கில் இளநீர் வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

cuddalore-mother-daughter-murder-case
cuddalore-mother-daughter-murder-case
author img

By

Published : Mar 4, 2021, 8:39 AM IST

புதுச்சேரி நோணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. கணவரை இழந்த இவரின் மகள்கள் ஜோதி, சந்தியா மற்றும் மகன் வாழுமுனி ஆகியோருடன் வசித்துவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் அருகே தனது வயலுக்கு சென்ற விஜயலட்சுமி, அவரது மகள் சந்தியா ஆகிய இருவரையும் அடையாளம் தெரியாத நபர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து ரெட்டிச்சாவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், சொத்துப் பிரச்சினை தொடர்பாக கொலை நடந்திருக்கலாம் எனக் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, விஜயலட்சுமியின் உறவினர்கள் நான்கு பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

கொலையாளிகளைப் பிடிக்க, ஏ.டி.எஸ்.பி., பாண்டியன் மேற்பார்வையில் மூன்று தனிப்படைகள் அமைத்து தேடினர். காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில் சந்தேகப்படும் படியான இளநீர் வியாபாரி ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் குற்றவாளி நகைக்காக இருவரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து இரண்டு கிராம் தங்க நகையை பறிமுதல் செய்தனர். கொலையாளி மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.

இதையும் படிங்க: சிறப்பாக செயல்பட்ட காவலர்களை பாராட்டிய மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.