கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார், ரத்னா தம்பதியினர். கடந்த ஜனவரி மாதம் சிவக்குமார் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன், அருணா ஆகியோர் ஜாமினில் விடுதலையாகி வெளியில் வந்துள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி விருத்தாசலம் மார்க்கெட் சென்றிருந்த ரத்னாவை வழிமறித்த கார்த்திகேயன் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் ரத்னா அளித்த புகாரின் அடிப்படையில் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கார்த்திகேயனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவின் அடிப்படையில் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கார்த்திகேயனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
இதேபோல், கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி நெய்வேலி டவுன்ஷிப் எம்.ஆர்.கே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செல்வகுமார் (30) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை அப்பகுதியைச் சேர்ந்த கட்டையன் (எ) தர்மசீலன் (26) என்பவர் வழிப்பறிச் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து செல்வகுமார் கொடுத்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தர்மசீலனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே தர்மசீலன் ஏழு வழக்குகள் உள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பரிந்துரையால் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் அவரை குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார்.
இதையும் படியுங்க :
அரசு அனுப்பிய தீர்மானத்தை ஆளுநர் நிராகரிக்க சட்டத்தில் இடமில்லை - வைகோ கருத்து