ETV Bharat / state

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீட்டில் மரணம்! - cuddalore crime news

கடலூர்: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீட்டில் ஜெயமணி என்பவர் மரணமடைந்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

கடலூர்
கடலூர்
author img

By

Published : Jan 23, 2020, 3:53 PM IST

கடலூர் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் சண்முகநாதன். இவருக்கு நிஷா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த சூழலில், நெய்வேலி தெற்கு தெருவைச் சேர்ந்த ஜெயமணி என்பவர்

நேற்று மதியம் சண்முகநாதனின் மனைவி நிஷாவை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்பு அவர் மர்மமான முறையில் சண்முகநாதன் வீட்டில் இறந்துகிடந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி காவல் துறையினர் ஜெயமணி உடலை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீட்டில் மரணம்

தொடர்ந்து, ஜெயமணியின் மனைவியும் அவரது உறவினர்களும் சண்முகநாதன் வீட்டின் முன்பு குவிந்தனர். சண்முகநாதன் மற்றும் அவரது மனைவி நிஷாவிடம் இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் ஜெயமணியின் உடலை உடற்கூறாய்வு செய்த பிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர் .

இதையும் படிங்க: திருமணமாகாத விரக்தியில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

Intro:கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீட்டில் மர்ம மரணம் கொலையா என போலீசார் விசாரணை
Body:கடலூர்
ஜனவரி 23,

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் -18 ல் உள்ள அண்ணா சாலையில் வசித்து வருபவர் சண்முகநாதன் (45) கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனின் நேர்முக உதவியாளர் இவருக்கு நிஷாஆனந்தி (30) என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  நெய்வேலி மேல் வடக்குத்து கிராமம் தெற்கு தெரு சேர்ந்த தங்கவேலு மகன் ஜெயமணி (36) இவர்  நெய்வேலியில் வேன் ஓட்டுனராக உள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் அண்ணா சாலையில் உள்ள  சண்முகநாதன் வீட்டிற்கு வந்த ஜெயமணி சண்முகநாதனின் மனைவி நிஷாஆனந்தியிடம் பேசுவதற்கு வந்துள்ளார். அங்கு ஜெயமணி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டவுன்ஷிப் போலிசார் ஜெயமணி உடலை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயமணி மனைவி மற்றும் உறவினர்கள் சண்முகநாதன் வீட்டின் முன்பு குவிந்தனர்.போலிசார் ஜெயமணி மர்ம மரணம் குறித்து சண்முகநாதன் மற்றும் அவரது மனைவி நிஷாஆனந்தி ஐ காவல் நிலையத்திறக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஜெயமணி உடல் பிரேத பரிசோதனை செயத  பிறகு மரணத்திற்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது. இறந்து போன ஜெயமணிக்கு சோலை என்கிற மனைவி மற்றும் முன்று குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஜெயமணிக்கும் ஆட்சியரின் நேர்முக உதவியாளருமான சண்முகநாதனின் மனைவி நிஷா ஆனந்திக்கு தொடர்ப்பு இருப்பதால் போலிசார் தீவிர விசாரணை நடத்த வருகிறனர்

படம்.
இறந்து போன ஜெயமணி படம்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.