மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் மருந்தகங்கள் உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வி. அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன் தெரிவித்ததாவது;
கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் தங்கு தடையின்றி மருந்தகங்கள் வழங்கிட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வெளிமாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து மருந்து பொருட்களை எடுத்து வருவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நகராட்சிகள், பேரூராட்சிகளில் பொதுமக்கள் வெளியே வருவதற்கு அனுமதி சீட்டு வழங்கப்படுவது போல், மருந்துப்பொருட்கள் உதவியாளர்கள் சென்று வர அனுமதிச் சீட்டு வழங்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிராமப்புறங்களில் உள்ள மருந்தகங்களின் ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொண்டு அனுமதி பெறலாம்.
அரசின் தடை உத்தரவுக்கு எதிராக திமுக வழக்கு: உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு
மக்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் லாப நோக்கில் இல்லாமல், சேவை நோக்கில் மருந்தகங்கள் விற்பனை செய்யவேண்டும். மருந்து பொருட்கள் அத்தியாவசிய தேவை என்பதால் அதனை பொதுமக்களுக்கு முறையாக வழங்கிட வேண்டும். மேலும் மருந்தகங்களில் மருந்து பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க அறிவுறுத்திட வேண்டும் எனத் தெரிவித்தார்.