கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பி முட்லூர் கொடிக்கால் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (48). இவர் அந்தப் பகுதியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பட்டாசுக் கடையில், திடீரென நேற்று (பிப்.27) இரவு தீப்பிடித்தது .
இதனால் கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறியது. மேலும் அங்கு இருந்த இருசக்கர வாகனம் எரிந்து சேதமானது. அங்கு கட்டி போடப்பட்டிருந்த நாய் தீயில் கருகி இறந்தது.
பட்டாசுகள் வெடித்து சிதறி அருகில் உள்ள வீடுகளுக்குள் விழுந்ததால், அங்கு வசிப்பவர்கள் அலறியடித்து ஓடினர். இதனையடுத்து, அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர்.
இதுதொடர்பாக பரங்கிப்பேட்டை காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாடிக்கையாளர்கள் திட்டியதால் தற்கொலையில் உயிரிழந்த பால் வியாபாரி!