உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் போர்க்கால அடிப்படையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
கடலூரில் நேற்றுவரை (ஆகஸ்ட் 3) கரோனா தொற்றால் 3 ஆயிரத்து 575 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று (ஆகஸ்ட் 4) 264 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 839ஆக உயர்ந்துள்ளது. 1, 509 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 3) வரை 2 ஆயிரத்து 12 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், இன்று (ஆகஸ்ட் 4) மேலும் 61 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து 2 ஆயிரத்து 73 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
கடலூரைச் சேர்ந்த 62 மதிக்கதக்க பெண்ணும் விருத்தாசலத்தைச் சேர்ந்த 76 வயது மதிக்கத்தக்க ஆண் என 2 பேர் இன்று (ஆகஸ்ட் 4) உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை பலனின்றி 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ்: 264 பேர் அட்மிட்; 61 பேர் டிஸ்சார்ஜ் - கரோனா நோய்தொற்று
கடலூர்: மாவட்டத்தில் ஒரே நாளில் 264 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.