ETV Bharat / state

'அரசுப் பள்ளி விடுதிகளில் உணவு தரமாக இல்லையேல் நடவடிக்கை...!' - கடலூர் ஆட்சியர் எச்சரிக்கை

author img

By

Published : Nov 7, 2019, 9:50 AM IST

கடலூர்: அரசுப் பள்ளி விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லையெனில், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

Cuddalore collector inspectes

கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அம்மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் ஊராட்சி கீழ்காட்டி கிராமத்தில் நடைபெற்றுவரும் மேம்பாலப் பணி, லால்புரத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நிலம் கையகப்படுத்தும் பணி, சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட தில்லை காளியம்மன் ஓடை தூர்வாரும் பணி, சிதம்பரம் அரசினர் நந்தனார் ஆண்கள் பள்ளியில் மாணவர்களின் வகுப்பறை, சமையல் கூடம், சுற்றுப்புறத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

Cuddalore collector inspected
கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தூர்வாரும் பணிகள் ஆய்வு

அதனைத் தொடர்ந்து பெராம்பட்டு-திட்டுகாட்டூர் இணைப்பு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி, எருக்கன்காட்டுப் பகுதி சாலை அமைத்தல், பலப்படுத்தும் பணி, குமராட்சி ஊராட்சி ஒன்றியம் அக்கரை ஜெயங்கொண்டான் ஏரி, வேலங்குடி பழைய கொள்ளிடம் ஆறு, வீராணம் ஏரி ராதா மதகு, வீராணம் ஏரி வாழக்கொல்லை புது வாய்க்கால், புவனகிரி பேரூராட்சியில் செயல்பட்டுவரும் ஸ்ரீ ராகவேந்திரா மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். ஆய்வின்போது அப்பகுதி மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து ஆட்சியர் கூறுகையில், "பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுவரும் பாலங்கள், நிலம் கையகப்படுத்தும் பணிகள், ஆறு, ஓடைகளைத் தூர்வாரும் பணிகள், சாலை சீரமைக்கும் பணிகள் மிகுந்த தரத்துடனும் விரைவாகவும் பணிகளை முடித்திட வேண்டும்.

Cuddalore collector
பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர்

மேலும் அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகள், சமையலறை, கழிவறைகள், சுற்றுப்புறப் பகுதிகளைத் தூய்மையாக வைத்துக்
கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளின் விடுதிகளில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவானது தரமானதாக இருக்க வேண்டும். இப்பணிகளைச் சரிவர மேற்கொள்ளாத அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார்.

இந்த ஆய்வின்போது சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், வேளாண்மை உதவி இயக்குநர், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர்கள், வட்டாட்சியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Cuddalore collector
அன்புச்செல்வனுடன் வட்டாட்சியர், பொதுப்பணித் துறை அலுவலர்கள்

மேலும் படிக்க: ’பஞ்சாயத்து செயலர்கள் மனது வைத்தால் எல்லாம் நடக்கும்'.. மாவட்ட ஆட்சியர் கருத்து

Intro:அரசு பள்ளிகள் விடுதிகளில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவானது தரமானதாக இருக்கவேண்டும்இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைBody:கடலூர்
நவம்பர் 6,

கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வெ.அன்புச்செல்வன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லைவிடங்கன் ஊராட்சி கீழ்காட்டி கிராமத்தில் நடைபெற்றுவரும் மேம்பாலப்பணிகளையும், லால்புரத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நிலம் கையகப்படுத்தும் பணிகளையும், சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட தில்லை காளியம்மன் ஓடை தூர்வாரும் பணிகளையும், சிதம்பரம் அரசினர் நந்தனார் ஆண்கள் பள்ளியில் பள்ளி மாணவர்களின் வகுப்பறை, சமையல் கூடம் மற்றும் சுற்றுபுறத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்
பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைதொடர்ந்து பெராம்பட்டு ஊராட்சியில் பெராம்பட்டு-திட்டுகாட்டூர் இணைப்பு உயர்மட்ட
மேம்பாலம் அமைக்கும் பணிகளையும், எருக்கன்காட்டு பகுதி சாலையை அமைத்தல் மற்றும்
பலப்படுத்தும் பணிகள் குறித்தும், குமராட்சி ஊராட்சி ஒன்றியம் அக்கரை ஜெயங்கொண்டான்
ஏரியினையும், வேலங்குடி பழைய கொள்ளிடம் ஆற்றினையும், வீராணம் ஏரி இராதா மதகு மற்றும்
வீராணம் ஏரி வாழக்கொல்லை புது வாய்க்காலினையும் மாவட்ட ஆட்சித்தலைவர்
பார்வையிட்டு ஆய்வு செய்தார். புவனகிரி பேரூராட்சியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராகவேந்திரா
மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியினையும் பார்வையிட்டார். மேலும் இந்த ஆய்வின்போது
அப்பகுதி மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் வெ.அன்புச்செல்வன் கூறியதாவது; பொதுமக்கள் பயன் பெறும் வகையில் கட்டப்பட்டு வரும் பாலங்கள், நிலம் கையகப்படுத்தும் பணிகள், ஆறு, ஓடைகளை தூர்வாரும் பணிகள், சாலை சீரமைக்கும் பணிகள்
மிகுந்த தரத்துடனும் விரைவாகவும் பணிகளை முடித்திட வேண்டும். மேலும் அரசு பள்ளிகளில்
வகுப்பறைகள், சமையல் அறை, கழிவறைகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்துக்
கொள்ள வேண்டும். அரசு பள்ளிகள் விடுதிகளில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும்
உணவானது தரமானதாக இருக்கவேண்டும் எனவும் இப்பணிகளை சரிவர மேற்கொள்ளாத
அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வில் சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், வேளாண்மை உதவி இயக்குநர் ஸ்ரீ.பூவராகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர்கள் அருணகிரி,குமார், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், புவனகிரி வட்டாட்சியர் சத்தியன்,காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் தமிழ்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.