தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
கடலூரில் நேற்றுவரை கரோனா தொற்றால் ஆயிரத்து 917 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 71 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 988 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 415 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மேலும் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 445ஆக உள்ளது.
மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 18 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.