கடலூர் தொகுதி வேட்பாளர் டாக்டர். கோவிந்தசாமி, அமைச்சர் சம்பத் தலைமையில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனை கூட்டத்தில், ‘வி ஃபார் விருத்தாசலம், வி ஃபார் விக்டரி’ என்ற முழக்கத்துடன் விஜயமாநகரத்திலிருந்து பரப்புரை தொடங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி பாமக வேட்பாளர் டாக்டர். கோவிந்தசாமி கூட்டணிக் கட்சியினருடன் விருத்தாச்சலம் தொகுதியில் உள்ள விஜயமாநகரம் கிராமத்திலிருந்து ஓட்டு சேகரிப்பை தொடங்கினார்.
இதில், அதிமுக ஒன்றியச் செயலாளர் பாலதண்டாயுதபாணி, பாமக மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் பல கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.