ETV Bharat / state

கரோனா பாதிப்பு: கடலூரில் 47 பேருக்கு தொற்று உறுதி! - கரோனா கண்டறிதல் சோதனை

கடலூர்: கரோனா வைரஸ் காரணமாக 47 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சைப் பலனின்றி இரண்டு பேர் உயிரிழந்தும் உள்ளனர்

Coronavirus: 47 people in Cuddalore confirmed corona infection!

author img

By

Published : Jun 21, 2020, 8:43 PM IST

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போர்க்கால அடிப்படையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஜூன் 30ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. மேலும், முகக் கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்துதல், தகுந்த இடைவெளி போன்றவற்றை பின்பற்றப்பட வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலூரில் நேற்று (ஜூன் 20) வரை கரோனா தொற்றால் 745 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஜூன் 21) மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 792ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரையும் கடலூர், விருதாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று கடலூர் மாவட்டம் கோண்டூரைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க ஒருவரும், நெய்வேலி வடக்குத்து பகுதியைச் சேர்ந்த 85 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. மேலும், 482 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.