தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக, கடலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், கடலூர் மாவட்ட நிர்வாகம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கடந்த 3ஆம் தேதி முதல், காவலர்களுக்கான பயிற்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சிப் பள்ளியில் பங்கேற்ற 10 பெண் காவலர்கள், 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 14 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, கரோனா பாதிப்பாளர்கள் 14 பேரும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பயிற்சியில் பங்கேற்ற 124 பெண் காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து, கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில், பயிற்சிக் காவலர்கள் நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியிலுள்ள ஸ்டேட் வங்கி கிளையில், வங்கிக்கணக்கு தொடங்கச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, கரோனா அச்சம் காரணமாக, தற்காலிகமாக ஸ்டேட் வங்கி மூடப்பட்டது.
இதேபோன்று, அதே வளாகத்தில் இயங்கிவரும் எல்ஐசி அலுவலகமும் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'செயல் திட்டம் இல்லை, தேர்தலில் மட்டுமே கவனம்'- விஜயனை வறுத்தெடுக்கும் காங்கிரஸ்