தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் இன்று (ஆக.18) கடலூர் மாவட்டத்தில் புதிதாக 250 பேருக்குத் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு ஆயிரத்து 332 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று வரை மாவட்டத்தில் நான்கு ஆயிரத்து 235 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் இன்று மேலும் 189 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன்மூலம் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்கு ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி 86 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.