தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டுகிறது. குறிப்பாக சென்னையில் அதிகரிக்க தொடங்கிய கரோனா வைரஸ், தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவ தொடங்கியுள்ளது.
அந்த வகையில், கடலூர் மாவட்டத்திலும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மட்டும் 79 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 67ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து பூரணமாக குணமடைந்து 1485 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால், கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. மேலும், 336 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கடலூர் விருத்தாச்சலம் சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.