ETV Bharat / state

என்எல்சி பாய்லரில் தவறி விழுந்து ஒப்பந்தத் தொழிலாளர் உயிரிழப்பு! - cuddalore district news

கடலூர் : என்எல்சியில் உள்ள பாய்லரில் தவறி விழுந்த ஒப்பந்தத் தொழிலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Contract worker casualties
ஒப்பந்த தொழிலாளர் உயிரிழப்பு
author img

By

Published : Nov 26, 2019, 10:04 AM IST

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த பெரியகாப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல். இவரது மகன் செல்வகுமார் (24). இவர் என்எல்சி புதிய அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக கடந்த 6 மாதமாக பணி புரிந்து வருகிறார். திருமணம் ஆகாத இவர் நேற்று வழக்கம் போல் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் பிரிவில் பணிபுரிந்த போது, எதிர்பாராத விதமாக பாய்லரில் தவறி விழுந்தார்.

The public in front of the hospital
மருத்துவமனையை முற்றுகையிடும் பொதுமக்கள்

இதைப் பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு செல்வகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

மருத்துவமனையை முற்றுகையிடும் கிராம மக்கள்

தகவல் அறிந்து வந்த செல்வக்குமாரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் என்எல்சி புதிய அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் தலைமையிலான காவல் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:கைகழுவ சென்ற மாணவர் மீது கிரிக்கெட் மட்டை விழுந்து உயிரிழப்பு

Intro:நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்புBody:கடலூர்
நவம்பர் 26,

நெய்வேலி அடுத்த பெரியகாப்பான் குளம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் குமரவேல் என்பவரின் மகன் செல்வகுமார் 24. இவர் என்எல்சி புதிய அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக கடந்த 6 மாதமாக பணிபுரிந்து வருகிறார். திருமணம் ஆகாத இவர் நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்த செல்வகுமார் பாய்லர் பிரிவில் சுமார் 90 மீட்டர் தொலைவில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக சக தொழிலாளர்கள் செல்வகுமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்ததாக கூறினார். தகவல் அறிந்து வந்த செல்வக்குமாரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் என்எல்சி புதிய அனல் மின் நிலையம் முன்பு முற்றுகையிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் தலைமையிலான இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், லதா ஆகியோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இறந்த செல்வகுமாரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் குடும்பத்தில் ஒருவருக்கு என்எல்சியில் நிரந்தர வேலை வழங்க கோரியும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர் என்எல்சி அதிகாரியிடம் உயிரிழந்த உறவினர்கள் மற்றும் தெரிவித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.