ETV Bharat / state

கடலூர் காவலர்கள் கட்டிக்கொடுத்த கருணை இல்லம்.. தந்தையை இழந்த குடும்பத்திற்கு அன்புச்சீர்.. நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

Compassionate home built by police: சாலை விபத்தில் கணவனை இழந்து 5 பிள்ளைகளுடன் தவித்து வரும் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கருணை இல்லத்தை கட்டிகொடுத்த விருத்தாசலம் உட்கோட்ட காவல்துறை அதிகாரிகளை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கடலூர் காவலர்கள் கட்டிக்கொடுத்த கருணை இல்லம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 10:48 PM IST

கடலூர் காவலர்கள் கட்டிக்கொடுத்த கருணை இல்லம்

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மணலூரை சேர்ந்தவர் சக்திவேல் - முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள் என ஐந்து குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் சக்திவேல் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

கணவனை இழந்த முத்துலட்சுமி தனது ஐந்து பிள்ளைகளை வளர்க்க முடியாமலும், பிள்ளைகளை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு போதிய வீடு வசதி இல்லாமலும் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் சாலை விபத்து விசாரணையின் போது, முத்துலட்சுமியின் ஏழ்மை நிலையையும், ஐந்து பிள்ளைகளை வைத்து அவர் படும் துன்பத்தையும் கண்ட விருத்தாச்சலம் காவல் உதவி கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், அக்குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டுமென முடிவெடுத்தார்.

அதன்படி வாட்ஸ் அப் குழு ஒன்றை ஆரம்பித்து, அக்குடும்பத்தின் ஏழ்மை நிலையை பற்றி தெரிவித்த போது, விருத்தாச்சலம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஆலடி, கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம், மங்கலம்பேட்டை,
பெண்ணாடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் என அனைவரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

அவர்கள் கொடுத்த தொகை மற்றும் தன்னார்வலர்கள் கொடுத்த தொகை என ஒட்டுமொத்தமாக சேர்த்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன குளியலறை, சமையலறை, படுக்கையறை என சகல வசதிகளுடன் கூடிய கருணை இல்லத்தை காவல்துறையினர் கட்டிக் கொடுத்துள்ளனர். இவ்வாறு கட்டப்பட்ட கருணை இல்லத்தை, இன்று (அக்.26) கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

முன்னதாக அந்த நடுத்தர குடும்பத்திற்கு தேவையான கட்டில் மெத்தை, பாய் தலையணை, வீட்டு சாமான் பொருட்களை காவல்துறையினர் சீர்வரிசையாக, மேளதாளத்துடன் கொண்டு வந்தனர். பின்னர் தமிழர்களின் முறைப்படி, புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டு, அனைவருக்கும் பசியாற காவல்துறை அதிகாரிகள் பந்தி பரிமாறினர்கள்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் கூறுகையில், “ எல்லோருடைய உள்ளங்களிலும் ஈரம் இருக்கும். அந்த ஈரத்தின் வெளிப்பாடு தான் இந்த அழகிய வீடு. விருத்தாச்சலத்தைச் சார்ந்த சக்திவேல் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

அவருடைய குடும்பத்தின் நிலைமையை அறிந்த விருத்தாச்சலம் காவலர்கள் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற முயற்சியின் வெளிப்பாடு தான் இந்த நிகழ்வு. இதற்காக விருத்தாச்சலம் கோட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களும் ஒன்று திரண்டு, நல்ல ஒரு செயலை செய்துள்ளனர். இதற்கு எனது பாராட்டுகள்” என தெரிவித்தார்.

சாலை விபத்தில் கணவனை இழந்த முத்துலட்சுமி தனது 5 பிள்ளைகளுடன் படும் கஷ்டத்தை உணர்ந்து, காவல்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து பத்து லட்சம் மதிப்பில் புதிதாக கருணை இல்லம் என்ற வீட்டை கட்டிக் கொடுத்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இரவு பகல் பாராமல், நாட்டையே தனது குடும்பமாக நினைத்து, மக்களுக்காக உழைத்து வரும் காவல்துறையினரின் இத்தகைய சேவையை, ஒட்டுமொத்த மக்களும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: “தமிழக அரசின் நீட் நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன்” - சகாயம் ஐஏஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.