கடலூர்: கடலூர் சிப்காட் பகுதியில் தனியார் தொழிற்சாலை வளாகத்தில் ஐந்து அடி நல்ல பாம்பு ஒன்று எதையோ விழுங்கிவிட்டு நெளிய முடியாமல் இருந்துள்ளது. இதனைக் கண்ட தொழிற்சாலை காவலாளி, அப்பகுதியில் உள்ள தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், விலங்குகள் நல ஆர்வலரும், பாம்பை பிடிக்கும் நபருமான செல்வா என்பவருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் அடிப்படையில், அப்பகுதிக்கு விரைந்து வந்த செல்வா, அங்கு கிடந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்து தூக்கும்போது, அப்பாம்பு திடீரென, தான் விழுங்கிய சாரைப் பாம்பை மெல்ல கக்கத் தொடங்கியது.
மெதுமெதுவாக தான் விழுங்கியிருந்த 4 அடி நீள சாரைப்பாம்பை முழுவதுமாக 2 நிமிடங்களில் கக்கியது. இதனை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் அதிகபேரால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: காவல் ஆணையர் அலுவலகத்தில் பிடிபட்ட பாம்பு...!