கடலூர்: சிதம்பரம் அருகே உள்ள தாண்டவராயன் சோழகன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர், கார்த்திகேயன் - அம்சா தம்பதியினர். இவர்களுக்கு 6-ம் வகுப்பு பயிலும் அதியமான் (12), 4-ம் வகுப்பு பயிலும் ஆதிஸ்ரீ (9)ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மாவீரர் சிலம்ப கலைக்கூடத்தில் சிலம்பம் கற்று வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 99வது பிறந்தநாள், மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு, இக்குழந்தைகள் இருவரும் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளையில் தொடங்கி மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு வரை 10 கி.மீ தொடர்ந்து படகில் சென்றவாறு இரு கம்பு சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்வு நடத்தினர்.
பழையாறு வந்தடைந்த சாதனை இக்குழந்தைகளை சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ், பழையார் ஊராட்சி மன்றத்தலைவர் மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். முடிவில் ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் சார்பில் இரு கம்பு சிலம்பம் சுற்றிய சாதனையை அங்கீகரித்து, பதக்கங்களை வழங்கி கெளரவித்தார். சாதனை புரிந்த மாணவர்களை பழையாறு மீனவ கிராம மக்கள் பாராட்டினர்.
இதையும் படிங்க: கனகசபை ஏறிய பக்தர்கள் - சிதம்பரம் கோயிலுக்குள் போலீஸ் படை..!