ETV Bharat / state

சிதம்பரம் கோவிலில் நடந்த ஆடம்பர திருமணம் - பக்தர்கள் அதிருப்தி

author img

By

Published : Sep 14, 2019, 8:41 AM IST

Updated : Sep 14, 2019, 12:19 PM IST

கடலூர்: சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் நேற்று முன்தினம் சிவகாசி ஸ்டேண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் பங்குதாரர் இல்லத் திருமண விழா நடைபெற்றது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த ஆடம்பர திருமணம் - பக்தர்கள் அதிருப்தி

சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று முன்தினம் சிவகாசி ஸ்டேண்டர்ட் பயர் ஒர்க்ஸ் பங்குதாரர் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதற்காக மண்டபம் முழுவதும் மின் விளக்குள், மலர் தோரணங்கள், வண்ண சீலைகள், பச்சை இலைகள் ஆகியவற்றால் பிரமாண்டமாக அலங்கரிகப்பட்டு இருந்தது. புனித இடமான இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் இதுவரை எந்த திருமண விழாவும் நடைப்பெறாத நிலையில் இந்த திருமணத்திற்கு கோயில் நிர்வாகம் அனுமதி அளித்தது சிதம்பரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த ஆடம்பர திருமணம்

உலக புகழ் பெற்ற இக்கோயில் சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர்களால் பாடல்பெற்ற தலமாகும். மேலும் இதனை பூலோக கைலாசம் என்று பக்தர்கள் குறிப்பிடுவார்கள். இக்கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் பக்தர்களால் ராஜசபை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன உற்சவத்தின்போது ஒரு காலை தூக்கி ஒற்றை காலுடன் நிற்கும் நடராஜர் சிலையை வைத்து வழிபடும் போது 999 தூண்கள் கொண்ட இந்த மண்டபம் 1000 கால் மண்டபமாக மாறியது என்று பக்தர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

இந்த ஆயிரங்கால் மண்டபத்தில்தான் மாணிக்கவாசகர் ஊமைப்பெண்ணை பதிகம்பாடிப் பேச வைத்தார். சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணத்திற்கு இறைவனே, உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுத்து அருளியதும், பின்னர் நூல் அரங்கேறியதும் இதே மண்டபத்தில் தான். இவ்வளவு சிறப்புடைய இந்த மண்டபத்தில் ஆன்மீக நிகழ்ச்சி தவிர வேறு எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி அளித்தது இல்லை. இந்நிலையில் இங்கு சிவகாசி ஸ்டேண்டர்ட் பயர் ஒர்க்ஸ் பங்குதாரர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி திருமணம் நடத்தியது கடவுளை அவமதிப்பதற்கு ஈடானது என்று பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Intro:கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பட்டாசு அதிபர் திருமணம்Body:கடலூர்
செப்டம்பர் 13,

சிதம்பரம் நடராஜர் கோயில், சிதம்பரம் தில்லை நடராஜ் கோவில் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் உலக புகழ் பெற்றதாகும். மூவர் பாடிய தேவார திருப்பதிகங்கள் கண்டெடுத்த தலம் இது.சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நால்வர்களால் தேவாரப் பாடல் பாடப்பெற்ற தலமாகும்.மேலும் இதனை பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்று பக்தர்கள் குறிப்பிடுவார்கள். இக்கோயிலுக்கென்று தனி மரபு உள்ளது.

*ஆயிரம்கால் மண்டபத்தில் சிறப்பு*

இந்த நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் மிகவும் சிறப்பு வாய்ந்தது இதனை ராஜ சபை என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் ஆனித் திருமஞ்சனம், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன உற்சவத்தின்போது நடராஜர் ஒருகாலை தூக்கிகொண்டு ஒரு காலுடன் நிற்கும் இந்த சிலையை இந்த மண்டபத்தில் வைத்தவுடன் 999 தூண்கள் கொண்ட இந்த மண்டபம் 1000 கால் மண்டபமாக மாறி உள்ளதாக பக்தர்கள் நம்பிக்கை வைத்து பல லட்சம் பக்தர்கள் வழிபட்டு வந்தார்கள். இந்த ஆயிரம்கால் மண்டபத்தில்தான் மாணிக்கவாசகர். ஊமைப்பெண்ணை பதிகம்பாடிப் பேச வைத்தார். சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணத்திற்கு இறைவனே, உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுத்து அருளியதும், பின்னர் நூல் அரங்கேறியதும் இந்த ஆயிரம்கால் மண்டபத்தில் தான்.
இந்த மண்டபத்தில் ஆன்மீக நிகழ்ச்சி தவிர வேற எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது.

*ஆயிரம்கால் மண்டபத்தில் திருமணம்*

பல்வேறு புகழ்பெற்ற இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று முன்தினம் சிவகாசி ஸ்டேண்டர்ட் பயர் ஒர்க்ஸ் பங்குதாரர் இல்ல திருமண விழா ஆயிரம் கால் மண்டபத்தில் நடந்துள்ளது. இதற்காக ஆயிரம்கால் மண்டபம் முழவதும் மின் விளக்குள், மலர் தோரணங்கள், வண்ண சீலைகள், பச்சை இலைகளால் நுழைவுவாயில் தோரணம் ஆகியவற்றால்
பிரமாண்டமாக அலங்கரிகப்பட்டு இருந்துள்ளது. இப்பகுதியில் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை, திருமண பேட்ஜ் அணிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புனித இடமான இந்த ஆயிரம்கால் மண்டபத்தில்
இதுவரை எந்த திருமண விழாவும் நடைப்பெறாத நிலையில் தற்பொழுது திருமணம் நடத்த கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது சிதம்பரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திருமணத்தை நடத்த ஒரு பெரும் தொகை கைமாறியிருக்கலாம் என
பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். புனிதமான ஆயிரம் கால் மண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதியளித்திருப்பது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இத் திருமணம் குறித்து வணிக வரித்துறை (ஓய்வு) நா.கா. நாகராஜன் கூறுகையில்; சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரம் கால் மண்டபம் உள்ளது இது யோகநெறி விஞ்ஞானப்படி ஆயிரம் இதழ் கொண்ட சகஸ்ராரம் இது பொது நிகழ்ச்சி நடத்த கூடிய இடம் அல்ல சேக்கிழார் பெரியபுராணம் அரங்கேறிய இடம் மாணிக்கவாசகரும் மாணிக்கவாசகர் ஊமைப் பெண்ணை பேச வைத்த இடம் மிகவும் புராணம் வாய்ந்த சரித்திரம் இடம்பெற்ற இடத்தில் தனிப்பட்ட முறையில் கல்யாணம் செய்வது உத்தமமான செயல் இல்லை தீச்சகர்கள் அனுமதி வழங்கி இருக்கலாம் மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கி இருக்கலாம் ஆனால் சைவர்களின் மனம் மிகவும் புண்பட்டப்பட்டிருக்கும் இதற்கு முன்னாள் காதலன் என்ற படம் எடுத்தார்கள் பத்திரிகையில் வெளிவந்து கோயில் பெயர் பெறும் அளவுக்கு இருந்தது கோவிலின் மேலே ஹெலிகாப்டர் சென்றது. சாப்பிட்டு விட்டு பிரியாணி பொட்டலம் போட்டது போன்றவை மன வருத்தம் அளிக்கிறது. இரண்டாவதாக இப்போது நடைபெற்ற இந்த ஆடம்பர திருமணம் சந்தோஷமான விஷயமல்ல இது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்றார்.Conclusion:
Last Updated : Sep 14, 2019, 12:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.